ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

அபுதாபி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி 4 நாட்கள் பயணமாக மொரீசியஸ், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, மொரீசியஸ் சென்ற ஜெய்சங்கர் 9வது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்றார்.

மொரீசியஸ் சுற்றுப்பயாத்தை நிறைவு செய்த ஜெய்சங்கர் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி சென்ற ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா பின் சயத் அல் நஹ்யானை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

Source link