சென்னை,
ஐபிஎல் வரலாற்றில் சிறந்த அணிகள் குறித்து இந்திய முன்னாள் லெக்-ஸ்பின்னரும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளே ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகள் என்று அவர் கூறினார்.
மேலும், இந்த இரண்டு அணிகளின் வெற்றிக்கான காரணங்கள் வேறுபட்டவை என்றும் அவர் தெரிவித்தார். சென்னை அணி பெரும்பாலும் அனுபவமுள்ள வீரர்களை நம்பி செயல்படுவதாகவும், மும்பை அணி இளம் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் சிறந்து விளங்குவதாகவும் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலம் ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போதுள்ள சென்னை அணியில் அதிக இளம் வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2026 தொடர் வருகிற 28-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.
