ஐபிஎல்: ஐதராபாத் அணி 226 ரன்கள் குவிப்பு

கொல்கத்தா,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில்கணக்கை தொடங்கும் முனைப்புடன் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் ஐதராபாத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் சர்மா , டிராவிஸ் ஹெட் இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். அபிஷேக் சர்மா 48 ரன்களும், ஹெட் 46 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் சிறப்பாக விளையாடிய கிளாசன் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் முசரபாணி 4 விக்கெட் , வைபவ் அரோரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Source link