புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், காயம் காரணமாக கொல்கத்தா வீரர் பதிரனா இந்த தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி20 உலக கோப்பை தொடரில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இன்னும் முழுமையாக அவர் குணமடையவில்லை. இதனால் மதீஷா பதிரனா இந்த தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
