ஐபிஎல் – கோலி, தோனி, ரோகித் கூட செய்யாத சாதனை… ‘அசாத்திய’ வரலாறு படைத்த மூவர்

சென்னை,

ஐபிஎல் தொடரில் ஆண்டுதோறும் பல சாதனைகளை உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அணிக்காக அறிமுகமாகும் முன்பே ஐபிஎல் இறுதிப்போட்டியில் ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ விருது வெல்வது மிகவும் அரிதான சாதனையாகும்.

18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 3 வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை புரிந்துள்ளனர். இதில் ஆச்சரியமானது என்னவெனில் தோனி, விராட், ரோகித் மற்றும் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இந்த பட்டியலில் இல்லை.

Also Read
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா
ஐபிஎல் - கோலி, தோனி, ரோகித் கூட செய்யாத சாதனை...  ‘அசாத்திய’ வரலாறு படைத்த மூவர்

அந்த 3 பேர் பட்டியல்:-

1. மன்விந்தர் பிஸ்லா (2012)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 2012 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 89 ரன்கள் அடித்து அணியை சாம்பியனாக்கினார். அந்த போட்டியில் ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ விருதை வென்றார்.

2. மனீஷ் பாண்டே (2014)

2014 இறுதிப்போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக 94 ரன்கள் அடித்து கொல்கத்தாவுக்கு இரண்டாவது கோப்பையை பெற்றுத் தந்தார். அப்போது அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை. பின்னர் 2015ல் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

3. க்ருனால் பாண்ட்யா (2017)

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2017 இறுதிப்போட்டியில் 47 ரன்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அப்போது இந்திய அணிக்காக அறிமுகமாகாத வீரராக இருந்த இவர், 2018ல் தேசிய அணியில் இடம்பிடித்தார். கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய அவர், இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ விருதை வென்றார்.

ஐபிஎல் சீசனில் இந்த அரிய சாதனையை படைக்கும் நான்காவது வீரர் யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link