ஐபிஎல்: சென்னை – பஞ்சாப் இன்று மோதல்

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்குவாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link