ஐபிஎல்: டெல்லி கேப்பிடல்ஸ் ஆலோசகராக செயல்படமாட்டேன் – கெவின் பீட்டர்சன்

டெல்லி,

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படமாட்டேன் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஆலோசகராக செயல்பட போதிய கால அவகாசம் வழங்காததால் இந்த முடிவு எடுத்துள்ளதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐபிஎல் தொடரில் போட்டி வர்ணனையாளராக செயல்படுவேன் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

Source link