ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 28-ந்தேதி உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் தொடக்க கட்ட போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவர் 2வது கட்ட தொடரிலிருந்து விளையாட முடிவு செய்துள்ளார்.
முன்னதாக கம்மின்ஸ் விலகியதால் தொடக்க போட்டிகளுக்கு ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
