ஐபிஎல் தொடரிலிருந்து பெங்களூரு வீரர் ஹேசில்வுட் விலகல் ?

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

காயம் காரணமாக அவர் சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்கவில்லை. அவர் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவக் குழுவிடமிருந்து ‘பிட்னஸ் சான்றிதழ்’ கிடைத்தால் மட்டுமே அவர் விளையாடலாம்.

Source link