ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு பின்னடைவு…காரணம் என்ன ?

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன், தொடரின் முதல் பாதி போட்டிகளில் (முதல் 7 போட்டிகள்) விளையாடமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.

அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதால் இந்த முடிவை பெர்குசன் எடுத்துள்ளார். பெர்குசனின் இந்த முடிவு, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

Source link