சென்னை,
உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர் ஐபிஎல். இதில் ஆண்டுதோறும் பல சாதனைகள் உருவாக்கப்படுகின்றன. அதில், சில சாதனைகள் பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலும் உள்ளன. 19-வது ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியநிலையில், இன்னும் முறியடிக்கப்படாத 10 முக்கிய சாதனைகள் குறித்து பார்ப்போம்.
முக்கிய ஐபிஎல் சாதனைகள்:
1. ஒரு சீசனில் அதிக ரன்கள்
விராட் கோலி 2016-ல் 973 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இது 10 ஆண்டுகளாக முறியடிக்கப்படவில்லை.
2. அதிக ரன் கூட்டணி
கோலி – ஏபிடி ஜோடி 2016-ல் 229 ரன்கள் சேர்த்தது.
3. அதிவேக சதம்
கிறிஸ் கெயில் 2013-ல் 30 பந்துகளில் சதம் – இன்னும் முறியடிக்கப்படாத சாதனை.
4. அதிவேக அரைசதம்
ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் (2023).
5. ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள்
கிறிஸ் கெயில் 17 சிக்சர்கள் (175 ரன்கள்) – வரலாற்றுச் சாதனை.
6. ஒரு ஓவரில் அதிக ரன்கள்
கிறிஸ் கெயில் மற்றும் ஜடேஜா தலா 37 ரன்கள்.
7. அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சு
அல்சாரி ஜோசப் – 6/12 (2019).
8. அதிக ஹாட்ரிக்
அமித் மிஸ்ரா – 3 ஹாட்ரிக்.
9. தொடர்ந்து அதிக வெற்றி
கொல்கத்தா – 10 தொடர்ச்சியான வெற்றிகள்.
10. ஒரு சீசனில் அதிக கேட்ச்
ஏபி டி வில்லியர்ஸ் – 19 கேட்ச்கள் (2016).
இந்த நிலையில், புதிய சீசனில் இந்த சாதனைகள் முறியடிக்கப்படுமா என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
