கொல்கத்தா,
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா – லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. பின் ஆலன் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிற்கிய ரகுவன்ஷி, ரஹானேவுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. ரஹானே 41 ரன்களும், ரகுவன்ஷி 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிங்கு சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ரோவ்மேன் பவல் மற்றும் கிரீனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. கிரீன் 32 ரன்களும், பவல் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றனர். இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது.
