சென்னை,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்கும் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சியை வருகிற 19-ந் தேதி மும்பையில் சந்திக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை அணி:
கோல் கீப்பர்கள்: சமிக் மித்ரா, முகமது நவாஸ், தேவன்ஷ் தபாஸ்.
பின்களம்: லால்டின்புயா, எல்சின்ஹோ டயாஸ், அங்கித் முஜர்ஜி, மதார் ராவ் தேசாய், பிரிதம் கோட்டல், விக்னேஷ், லால்டின்லியானா ரென்ட்லி, ராஜ் பாஸ்போர், எட்வர்டோ காவ், ஜஹாங்கிர் அகமது ஷாகோ.
நடுகளம்: ஆல் பர்ட்ரோ நோகுவேரா. முகமது அலி பெம்மாமர், ஜிதேந்திர சிங், லான்ரின் லியானா ஹனாம்டே, ஜிதேஷ்வர் சிங், பரூக் சவுத்ரி, மகேசன் சிங், குரூஸ் னர் பெரேரா, நிதிஷ்குமார் மெய்தி.
முன்களம்: இம்ரான் கான், இனிகோ மார்ட்டின், குர்கிரத் சிங், இர்பான் யாத்வாத், டேனியல் சிமா , பிரகதேஸ்வான்.
