ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியிடம் சென்னை தோல்வி

மும்பை,

12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று இரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியிடம் தோல்வி கண்டது. 49-வது நிமிடத்தில் பிரிகிக் வாய்ப்பை பயன்படுத்தி மும்பை சிட்டி வீரர் ஜோனி காய்கோ கோல் அடித்தார்.

Source link