ஐ.டி.எப். மகளிர் ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா வெற்றி

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஐ.டி.எப். மகளிர் ஓபன் டபிள்யூ100 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் எஸ்.எம். கிருஷ்ணா டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்சிஸ்கா குர்மியை எதிர்த்து, இந்தியா சார்பில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிடிபதி விளையாடினார்.

இதில், முதல் செட்டில் டைபிரேக் வரை வெற்றி பெற அவர்கள் இருவரும் கடுமையாக போராடினர். எனினும் 7-6(6) என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை ஸ்ரீவள்ளி ராஷ்மிகா கைப்பற்றினார்.

Also Read
துணை முதல்-மந்திரி கூட்டத்தில் செருப்பை காட்டி, அவதூறாக பேசி வன்முறை; எப்.ஐ.ஆர். பதிவு

ஐ.டி.எப். மகளிர் ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா வெற்றி

இதன்பின்னர் 6-4 என்ற புள்ளி கணக்கில் 2-வது செட்டையும் கைப்பற்றியதுடன் போட்டியில் குர்மியை வீழ்த்தி ஸ்ரீவள்ளி ராஷ்மிகா வெற்றி பெற்றுள்ளார்.

இதனால், இந்தியாவின் சகஜா யமளப்பள்ளி, வைஷ்ணவி அத்கர் ஆகியோருடன் அவர் வெற்றி வரிசையில் இணைந்துள்ளார்.

Source link