ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் சுற்றை எட்ட குறைந்தது 8-9 வெற்றிகள் தேவையாகும்.

இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்சை எதிர்கொள்கிறது.

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் தனது முதல் 3 ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு அணிகளிடம் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பையை பந்தாடியது. குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி யுள்ளன. இதில் 19-ல் சென்னையும், 12-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள் ளன. சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 10 ஆட்டங்களில் 7-ல் சென்னையும், 3-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.

முன்னதாக, இன்று மாலை 3.30 மணிக்கு நியூ சண்டிகாரில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Source link