ஒருகாலத்தில் நகைக்கடையில் சேல்ஸ் கேர்ள்…இன்று பிரபல தொகுப்பாளினி – யார் அவர் தெரியுமா?

ஐதராபாத்,

திரையுலகில் பிரபலமான பலரும் ஆரம்பத்தில் பல்வேறு வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். அந்த வரிசையில், தொகுப்பாளரும் நடிகையுமான ஸ்ராவந்தி சோகாரப்பு தனது ஆரம்பகால போராட்டங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டார்.

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், “ஆறாம் வகுப்பு முதல் மெஹந்தி போட்டு பணம் சம்பாதித்தேன். ஒரு பியூட்டி பார்லருடன் இணைந்து மெஹந்தி ஆர்டிஸ்டாக வேலை செய்தேன்” என்று தெரிவித்தார். நடிகையாக வரவேண்டும் என்ற கனவுடன் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்ததாகவும் கூறினார்.

ஆனால் தனிப்பட்ட காரணங்களால் திரைப்பட வாய்ப்புகளை விட்டு விலகிய அவர், திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட நிதி சிக்கல்களால் ஐதராபாத் பஞ்சகுட்டாவில் உள்ள நகைக்கடையில் விற்பனையாளர் பணியில் சேர்ந்ததாக தெரிவித்தார். நீண்ட நேரம் நிற்க வேண்டிய அவசியம் காரணமாக உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டதால் அந்த வேலையை விட்டதாகவும் கூறினார்.

Also Read
பாலிவுட் திரில்லரை புகழ்ந்த மணிரத்னம் – வைரலாகும் கருத்து
ஒருகாலத்தில் நகைக்கடையில் சேல்ஸ் கேர்ள்…இன்று பிரபல தொகுப்பாளினி - யார் அவர் தெரியுமா?

பின்னர் நண்பர் அபிராமின் மூலம் ஒரு சேனலில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து தனது ஆங்கர் பயணம் தொடங்கியது என்றும், கடின உழைப்பால் தான் இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன் என்றும் ஸ்ராவந்தி சோகாரப்பு தெரிவித்தார்.

Source link