ஒரேயொரு நியாயமான காரணம்.. 21 ஆம் தேதிக்குள் சொல்ல முடியுமா? இபிஎஸ்ஸுக்கு திருமாவளவன் கேள்வி – vck thirumavalavan questioned to eps about aiadmk alliance with bjp

கடந்த சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து இந்த முறையும் அதிமுக, பாஜக கூட்டணி இணைந்துள்ளது. இந்த
கூட்டணியை திமுகவும், கூட்டணி கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் நடக்கவிருக்கும் தேர்தல் என்பது டெல்லி, தமிழ்நாட்டுக்கு இடையிலானது என தொடர்ச்சியாக கூறி வருகிறார். இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 20-க்கும் அதிகமான கட்சிகள் இணைந்துள்ளன. இதில் விசிகவுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தனது கட்சி மற்றும் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் தலைவர் எம்பி திருமாவளவன்.

திருமாவளவன் பரப்புரை
இந்நிலையில் செங்கல்பட்டு பரப்புரையில் ஈடுபட்ட திருமாவளவன், எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களால் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு ஒரேயொரு நியாயமான காரணத்தை கூற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் பரப்புரைக்கு வரும் 21 ஆம் தேதி வரை அனுமதி உள்ளது. அதற்குள் அந்த காரணத்தை ஒரேயொரு முறையாவது விளக்கி சொல்லுங்கள் என பேசியுள்ளார் திருமாவளவன். தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது சம்பந்தமாக அதிமுகவை திருமாவளவன் விமர்சனம் செய்து வருவது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி
முன்னதாக ஒருவேளை தப்பித்தவறி அதிமுக இந்த தேர்தலில் ஜெயித்து விட்டால், காரைக்குடியை சார்ந்த எச். ராஜா தான் முதல்வர் ஆவார் என்று பேசியிருந்தார். இது பெருமளவில் பேசுபொருளான நிலையில், தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தற்கான நியாயமான காரணத்தை கூற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன். இதனிடையில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிமுகவும் விசிக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் திருமாவளவன்.

தமிழ்நாடு தேர்தல் களம்
மேலும், அவ்வாறு அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்தால் பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி அமைத்திருக்க மாட்டார். இன்றைய தமிழ்நாடு தேர்தல் களமும் மாறியிருக்கும் என தெரிவித்துள்ளார். திருமாவளவன் திமுகவுடனான கூட்டணியில் விசிக தொடர்வது குறித்து தனது பரப்புரைகள் அனைத்திலும் பேசி வருகிறார். கொள்கை ரீதியாக அமைந்த இந்த கூட்டணி தன்னால் சிதறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்து விசிகவை பிரிப்பதற்கு பல வகைகளில் முயற்சிகள் நடந்ததாகவும் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இரண்டு மாதங்களில் பதவி பறிப்பு
இவ்வளவு இடையூறுகளை கடந்தும் திமுக கூட்டணியில் திருமாவளவன் நீடிப்பது அவரின் கொள்கை பிடிப்பை பிரதிபலிப்பதாக முற்போக்காளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையில் செங்கல்பட்டு பரப்புரையில் பேசிய திருமாவளவன், ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தப்பித்தவறி இந்த தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானால், இரண்டு மாதங்களில் அவருடைய பதவி பறிக்கப்படும்.

ஆளுநராக அனுப்பி வைத்து விடுவார்கள்
அவருக்கு பதிலாக தமிழக முதல்வராக எச். ராஜா, அண்ணாமலை அல்லது நயினார் நாகேந்திரனை பாஜகவு தேர்வு செய்யும். எனவே மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தங்களது ஆதரவை அளிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். மற்றொரு பக்கம் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழியும், தேர்தலுக்கு பின்பாக எடப்பாடி பழனிசாமியை ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னராக அனுப்பி விடுவார்கள் என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link