ஒரேயொரு பிரச்சனை தான்.. 72 நாள் ஆளை காணோம்… தவெக விஜய்யை விளாசிய எடப்பாடி பழனிசாமி – i have been to prison seven times edappadi palaniswami criticized tvk vijay

பாஜக, பாமக, அமமுக, புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது அதிமுக. இந்த முறை எப்படியாவது இழந்த ஆட்சியை பிடித்து விட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தீவிரமான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனிடையில் திமுக இல்லாமல் விஜய்யின் தவெக கட்சியும் அவருக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால் தனது தேர்தல் பரப்புரைகள் அனைத்திலும் விஜய்யையும் விமர்சனம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

தவெக விஜய்
முன்னதாக கரூர் சம்பவத்துக்கு பின்பாக அதிமுக – பாஜக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வருமென மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். இதனால் அதிமுகவினர் பெரியளவில் தவெக விஜய்யை விமர்சிக்காமல் இருந்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என திட்டவட்டமாக தெரிவித்தது. இதனையடுத்து அதிமுக பிரமுகர்கள் விஜய்யை விமர்சிக்க ஆரம்பித்தனர்.

எடப்பாடி பழனிசாமி பரப்புரை
இந்நிலையில் தவெக வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலையில், பரப்புரைகளில் விஜய்யை அதிமுக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூரில் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, திரைப்படத்துக்கு போங்க. நல்லா பாருங்க. ரசிங்க அதோடு விட்றணும். நல்லா தூக்கும் போது அற்புதமான கனவு வரும். கண் விழிச்சா கனவு வராது. அப்படித்தான் திரையுலகம். ஓட்டை வேஸ்ட் பண்ணாதீங்க. சிந்திச்சு பாருங்க.

ஒரேயொரு பிரச்சனையால் ஆளையே காணோம்
ஒரு ஆள் ஐம்பது பேரை சினிமாவில் அடிக்க முடியும். உங்களால முடியுமா? இந்த நாட்டை ஆளக்கூடிய சிங்க குட்டிகள் நீங்கள். யோசிச்சு பாருங்க. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என அறிவுரை வழங்கியுள்ளார். தொடர்ந்து கரூர் சம்பவத்துக்கு பின்பாக தமிழக வெற்றிக் கழகம் இரண்டு மாதங்களுக்கு மேலாக செயல்படாமல் இருந்தது குறித்தும் பேசி விமர்சனம் செய்துள்ளார் இபிஎஸ். அதாவது ஒரேயொரு பிரச்சனை வந்தது 72 நாள் ஆளை காணோம்.

கடும் விமர்சனம்
நான் கட்சியில் சேர்ந்து ஏழு முறை சிறை சென்று இருக்கிறேன். எவ்வளவு பிரச்சனை வந்தாலும், மக்களை காப்பாற்றுவது தான் அரசியல் கட்சி தலைவரின் கடமை. அரசியலில் வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் வந்த பிறகு தன்னை நம்பியவர்களுக்கு பிரச்சனை வந்தால் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

நான்கு முனை போட்டி
இந்த முறை சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக பல இடங்களில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதில் புதிதாக அரசியலில் வந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாருடைய வாக்கை பிரிப்பார் என்பது அரசியல் களத்தில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதனிடையில் விஜய் வரும் தேர்தலில் திமுக, தவெக இடையில் தான் போட்டி உள்ளது.

செங்கோட்டையன் கருத்து
மற்ற யாரும் களத்தில் இல்லையென பேசி வருகிறார். அவருடைய கட்சி நிர்வாகிகளும் இதனை வலியுறுத்தி கொண்டிருக்கின்றனர். இதனால் அதிமுக, நாதகவினர் தமிழ் வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனிடையில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்து செங்கோட்டையன், விஜய்யின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக முயன்றார். என்னால் அந்த திட்டம் நடக்காததால் என்மீது கொலை வெறியில் இருக்கிறார் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link