சென்னை,
10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கையின் பதும் நிசாங்கா (100 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), கனடாவின் யுவராஜ் சம்ரா (110 ரன், நியூசிலாந்துக்கு எதிராக). இப்போது பாகிஸ்தானின் சஹிப்சதா பர்ஹான் (100 ரன், நமிபியாவுக்கு எதிராக) ஆகியோர் சதம் அடித்துள்ளனர். இதனால் அதிக சதங்கள் (3) அடிக்கப்பட்ட உலகக் கோப்பையாக இது மாறியுள்ளது.
இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பை தொடரிலும் 2 சதத்துக்கு மேல் அடிக்கப்பட்டதில்லை.
