ஒரே போட்டியில் இரட்டை சாதனை… பிஷ்னோய் மிரட்டல்

அகமதாபாத்,

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி, அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த ஸ்பின்னர் என்ற சாதனையை பதிவு செய்தார்.

இதன் மூலம் அவர் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் நான்கு விக்கெட்களை பதிவு செய்தார். மேலும், தனது இரண்டாவது விக்கெட்டை எடுக்கும்போது டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எட்டிய இளம் இந்திய பந்துவீச்சாளராகவும் அவர் சாதனை படைத்தார்.

Also Read
ஆர்சிபிக்கு எதிராக… நேருக்கு நேரில் முன்னிலை வகிக்கும் சிஎஸ்கே – தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
ஒரே போட்டியில் இரட்டை சாதனை… பிஷ்னோய் மிரட்டல்

இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய பிஷ்னாய், 4 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதற்கு முன், குஜராத் அணிக்கு எதிராக க்ருனால் பாண்ட்யா 3 விக்கெட்டுகள் எடுத்ததே அதிகமாக இருந்தது.

Source link