ஓட்டு கேட்டு யாரும் வர வேண்டாம் என பேனர் வைத்த மக்கள்

பேனர் வைத்த மக்கள் : 

திருப்பத்தூர்  அடுத்த கோனேரிகுப்பம் ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் ஆங்காங்கே தேர்தல் புறக்கணிப்பு என்ற பெயரில் எந்த கட்சி தலைவரும் எங்கள் ஊருக்கு ஓட்டு கேட்க வர வேண்டாம் என வினோத பேனர் வைத்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மக்கள் கூறுகையில் எங்கள் ஊரில் சாலை வசதி இல்லாத காரணத்தால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பாடுகிறது மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தரமற்ற சாலையில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.

அதேபோல இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல கூட சரியான சாலை வசதி இல்லை இது குறித்து 30 ஆண்டு காலமாக போராடி வருகிறோம் இதுவரை எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.

எனவே தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்க வேட்பாளர்கள் வந்துவிடுகின்றனர் எனவே எந்த கட்சித் தலைவர்களும் எங்கள் ஊருக்கு ஓட்டு கேட்க வரவேண்டாம் நாங்கள் தேர்தலை புறக்கணிக்க போகிறோம் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

Source link