கஞ்சா, போக்சோ வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த அருள்ராஜ் (வயது 28), தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.

விளாத்திகுளத்தைச் சேர்ந்த அப்பண்ணசாமி(37), விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.

மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஆத்தூர் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரையும் நேற்று போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Source link