கடும் வெயில் தாக்கம்.. அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.!

தஞ்சாவூர்,

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் இன்று காலை முதலே பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள், உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கடும் வெயிலால் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link