கண்ணில் காயம்… இன்ஸ்டாவில் ஜோக்! – வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் புகைப்படம்

சென்னை,

பயிற்சிபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் வலது கண்ணில் பலத்த காயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, தனது தற்போதைய நிலையைப் பகிரும் வகையில் பென் ஸ்டோக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஏற்பட்ட காயத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு கருத்து தெரிவித்துள்ள அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Also Read
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட நாங்கள் தயார் – சூர்யகுமார் யாதவ்
கண்ணில் காயம்… இன்ஸ்டாவில் ஜோக்! - வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் புகைப்படம்

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது ஏற்பட்ட தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், இந்த புதிய விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

பென் ஸ்டோக்ஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என அணித் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source link