கத்தாரில் ஹெலிகாப்டர் விபத்து; 6 பேர் பலி

தோஹா

கத்தார் நாட்டில் இருந்து வழக்கம்போல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பணிக்காக இன்று புறப்பட்டது. அதில் மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், அது கடல்வழியே பறந்து செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.

இதனால், ஹெலிகாப்டர் நீருக்குள் விழுந்தது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் நீரில் மூழ்க தொடங்கினர். இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதனை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த விபத்துக்கான காரணம் என்றும் அது தெரிவிக்கின்றது. காணாமல் போன நபரை தேடும் பணியும் நடந்து வருகிறது.

Source link