தோஹா,
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரின்டெர்னெக் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
