மும்பை,
நடிகை பூஜா ஹெக்டே, அமெரிக்க பாடகர் ஜான் மேயரின் கச்சேரியில் கலந்து கொண்டது குறித்து தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பல ஆண்டுகளாக ஜான் மேயரின் ரசிகையாக இருப்பதாக கூறிய பூஜா, அவர் பாடுவதை நேரில் பார்த்ததை நம்பவே முடியவில்லை என்றும் இது தன் கனவு பட்டியலில் இருந்த ஒன்று என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் கச்சேரி புகைப்படங்கள் மற்றும் வீடியோகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
ஜான் மேயரின் ’ரூம் ஆப் ஸ்கொயர்ஸ்’(Room for Squares) , ’ஹெவியர் திங்ஸ்’ (Heavier Things) போன்ற ஆல்பங்கள் உலகளவில் வரவேற்பைப் பெற்றவை. “யுவர் பாடி இஸ் எ வொண்டர்லாண்ட்” (Your Body Is a Wonderland) பாடலுக்காக அவர் கிராமி விருதும் பெற்றுள்ளார்.
பூஜா ஹெக்டே கடைசியாக ’கூலி’ படத்தில் இடம்பெற்றிருந்த “மோனிகா” பாடலில் தோன்றினார். தற்போது எச்.வினோத் இயக்கியுள்ள “ஜன நாயகன்” படத்தில் நடித்துள்ளார். சென்சார் பிரச்சினையால் இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
