கமலை விட்டு விட மாட்டோம்.. மநீம முடிவு ஏற்புடையதாக இல்லை… முதல்வரிடம் திருமாவளவன் முக்கிய வேண்டுகோள் – makkal needhi maiam should contest the 2026 assembly election vck mp thirumavalavan request

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் அதே நேரம் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் கமல் ஹாசன் அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இந்த தேர்தலில் மநீம போட்டியிட வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் விசிக, தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தையை நிறைவு செய்தது திமுக. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை திமுக குழுவுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரண்டு தொகுதிகள் வழங்குவதற்கு திமுக முன்வந்துள்ளது. அதோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் நீதி மய்யம் தரப்பில் இருந்து டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் மநீம வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என அக்கட்சியின் தலைவர் கமல் அறிவித்தார். அதோடு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். அவரின் இந்த முடிவை, “கமல் செய்துள்ளது தியாகம். அவருடைய முடிவு என்னை நெகிழ வைத்து விட்டது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும். வெல்வோம் ஒன்றாக என்ற முழக்கம் முழுமை பெற வேண்டும். மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வேண்டுகோள்.
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடாமல் திமுக கூட்டணியை ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பது ஏற்படுடையாதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பை பெற்ற மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவிலாக வாக்கு வங்கியை வைத்துள்ளவர். 2017 ஆம் ஆண்டிலிருந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மாநில மற்றும் இந்திய அளவில் இந்திய அளவிலும் மகள்ளுக்கு தொடர்ந்து வாதாடுகிற போராடுகிறவர்களாக தொய்வின்றி இயங்கி வருகிறோம்.
கருத்தியல் உறுதிப்பாடு கொண்ட, நம்பகத்தன்மை வாய்ந்த தோழமை சக்தியை வலுப்படுத்துவதன் வாயிலாகவே இந்த மண்ணில் பகையை வேரூன்ற விடாமல் தடுக்க இயலும். இதுசாரி தோழமை சக்திகளை வலுப்படுத்த வேண்டியதும், கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நெருடல் ஏற்பட்டதால், இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என முடிவெடுத்திருப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். ஆனால் அண்ணன் கமல் திமுக தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும். கமல் அவரை ‘அவ்வாறு விட்டு விடமாட்டோம்’. தொகுதிகளின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
இதன் மூலமாக கூட்டணி மீதான நன்மதிப்பையும், தங்கள் மீதான பெருமதிப்பையும் மேலும் உயர்த்திட வேண்டும். இதனை தங்களின் உடன்பிறப்பு எனும் உரிமையோடும், தோழமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் தங்களின் உன்னதம் வாய்ந்த வெல்வோம் ஒன்றாக என்ற சகோதரத்துட முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும். இவ்வாறு திருமாவளவன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த நிலையில், திருமாவளவன் வைத்துள்ள இந்த கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இதனையடுத்து அவரின் இந்த வேண்டுகோளுக்கு முதல்வர் மற்றும் கமலின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Source link