தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், 2024-ம் ஆண்டு பான் இந்தியா படமாக வெளியாகி ‘ஹிட்’ அடித்த ‘கல்கி 2898 ஏ.டி.’ படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்தார். அவரது வித்தியாசமான கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதற்கிடை யில் ‘கல்கி’ படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
இதில் கமல்ஹாசன் கதாபாத்திரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த படத்துக்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படத்தில் 10 முதல் 14 நாட்கள் வரை நடித்ததற்காக, கமல்ஹாசன் ரூ.150 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக பேசப்படுகிறது.
இந்திய சினிமாவில் குறைந்த நாட்களுக்கு கமல்ஹாசன் வாங்கியுள்ள சம்பளம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது கமல்ஹாசனின் மிரட்டல் நடிப்புக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.
