களத்தில் இறங்குகிறார் அண்ணாமலை! கோவையில் நாளை தேர்தல் பரப்புரை தொடக்கம் – annamalai enters the field election campaign kicks off in coimbatore tomorrow

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனை ஆதரித்து அண்ணாமலை நாளை தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.

K Annamalai Election Campaign(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளரும் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை நாளை தனது தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.

கோவையில் முதல் கட்டப் பிரச்சாரம்
நாளை மாலை கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உரையாற்றுகிறார். அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அவர் முதன்முதலில் வாக்கு சேகரிக்கிறார். கொங்கு மண்டலத்தில் பாஜகவின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரச்சாரத்திற்குப் பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எல். முருகன் வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்பு
கோவை பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, மத்திய அமைச்சர் எல். முருகன் போட்டியிடும் அவினாசி தொகுதிக்கு அண்ணாமலை விரைந்து செல்கிறார். அங்கு வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்று, அவருக்கு ஆதரவாக ரோடு ஷோ மற்றும் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
பாஜகவின் தேர்தல் வியூகம்:
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வரும் அண்ணாமலை, அடுத்த 15 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்கங்களை முன்வைத்து அவர் தனது உரையை அமைக்க உள்ளதாகத் தெரிகிறது.