கவனம் ஈர்க்கும் ‘டூன் 3’ படத்தின் டீசர்… திரைக்கு வருவது எப்போது?

சென்னை,

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டூன்: பார்ட் 3’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர்டெனிஸ் வில்ல்னூவ் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், பிராங்க் ஹெர்பர்ட் எழுதிய ‘டூன் மெசையா’ நாவலை அடிப்படையாகக் கொண்டது.

இந்த திரைப்படம், இரண்டாம் பாகம் முடிந்த இடத்திலிருந்து பால் அட்ரைடீஸின் கதையை தொடர்ந்து சொல்லுகிறது. பேரரசராக உயர்ந்த பால், தனது ஆட்சியை எவ்வாறு நிலைநிறுத்துகிறார் மற்றும் உலகளவில் உருவாகும் போர்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

Also Read
“அதனால்தான் ஸ்ரீலீலா என்னை பார்த்தார்” – வைரலான வீடியோவுக்கு நடிகர் மகேஷ் விளக்கம்
கவனம் ஈர்க்கும் ‘டூன் 3’ படத்தின் டீசர்... திரைக்கு வருவது எப்போது?

டீசரில் இடம் பெற்றுள்ள அராக்கிஸ் கிரகத்தின் காட்சிகளும், அதில் இடம்பெறும் பிரமாண்ட போர்க்காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்த படத்தில் டிமொத்தி சாலமேட், ஜெண்டயா, புளோரன்ஸ் பியூ, அன்யா டெய்லர்-ஜாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 18-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link