கவிஞர் வைரமுத்து பரிந்துரைத்த கொரிய “காதல்” படம்

காதலர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து பரிந்துரைத்த ‘காதலை’ மையமாக கொண்ட திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 7.3 ரேட்டிங் பெற்றுள்ளது. பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு படம் பார்த்தேன்; கொரியப் படம். ‘Even if this Love Disappears tonight’ என்பது தலைப்பு. ‘இன்றிரவே இந்தக் காதல் மறைந்து படுமாயினும்’ என்று தமிழ்ப்படுத்தலாம். ஆனால், எந்தவொரு செயற்கை சில்மிஷமும் இல்லாமல் இலையில் நகரும் நீர்த்துளிபோல இயல்பாய் அசைகிறது கதை. எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. இத்துனூண்டு கவிதையை ரசிக்கும் இதயங்களுக்கு இதுபிடிக்கும். இதோ எனது அதிகாலை காஃபியின் நுரைகளில் நேற்றிரவு பார்த்த நிலா முகங்கள் நொறுங்கும் பிம்பங்களாய்!” என பதிவிட்டுள்ளார்.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கும் ‘Even If This Love Disappears From the World Tonight’ படம் கடந்த ஆண்டு தென்கொரியாவில் வெளியானது. தற்போது ஓடிடியில் காணக்கிடைக்கிறது

Source link