காங்கிரஸ் வேட்பாளர் நிறுவனத்தில் வெள்ளி நாணயங்கள் பறிமுதல்

புதுச்சேரி,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பாலமுருகனுக்கு, தட்டாஞ்சாவடி தொழிற் பேட்டையில் இயங்கி வரும் முத்தியால்பேட்டை காங்கிரஸ் வேட்பாளர் ஈரம் ராஜேந்திரனுக்கு சொந்தமான நிறுவனத்தில் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்தி ருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து தோதல் அதிகாரிகள் அந்த நிறுவனத் தில் சோதனை நடத்தினர். அங்கு வேட்பாளர் புகைப்படம் போட்ட 85 டிசர்ட் 599 டோக்கன்கள். மொத்தம் 840 கிராம் கொண்ட தனி பெட்டிகளில் ராஜேந்திரன் உருவம் பொறித்த ஆயிரத்து 400 வெள்ளி நாணயங்கள், ரூ. 64 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது. இதையடுத்து நிறுவன மேலாளர் ராஜாவிடம் விசாரணை நடத்தினர். முத்தியால்பேட்டை தொகுதி வாக்காளர்களுக்கு வழங்க இவை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்தை விதிகள் மீறப்பட்ட தால் தேர்தல் அதிகாரிகள் வெள்ளிநாணயம் உட்பட பொருட்களை பறிமுதல் செய்தார். ராஜாவையும், அந்த பொருட்களையும் கோரி மேடு போலீசில் ஒப்படைத் தார். இன்ஸ்பெக்டர் பால முருகன் மற்றும் போலீசார் மேலாளர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source link