காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் 28 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான பணியில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைத் தலைவர் ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் பட்டியலில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படுவார் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு;-

ஸ்ரீபெரும்புதூர்(தனி) – செல்வப்பெருந்தகை

சோளிங்கர் – முனிரத்னம்

உதகை – ராமச்சந்திரன்

விளவங்காடு – பிரவீன்

கிள்ளியூர் – ராஜேஷ்குமார்

ஊத்தங்கரை – குப்புசாமி

கவுண்டம்பாளையம் – சூர்யபிரகாஷ்

சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் – விச்சு லெனின் பிரசாத்

கடலூர் – சந்திரசேகரன்

மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது

பொன்னேரி(தனி) – துரைசந்திரசேகர்

ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் -சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம் – துரை

நாங்குநேரி – ரூபி மனோகரன்

குளச்சல் – தாரகை கத்பட்

அறந்தாங்கி – டி.ராமச்சந்திரன்

ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன்

திருவாடனை – – ராம கரு.மாணிக்கம்

காரைக்குடி – மாங்குடி

சிவகாசி – கணேசன் அசோகன்

வேளச்சேரி – ஹசன் மவுலானா

பென்னாகரம் – தமிழ்க்குமரன்

கிருஷ்ணகிரி – செல்லக்குமார்

ஆத்தூர்(தனி) – அர்த்தநாரி

உசிலம்பட்டி – டி.சரவணக்குமார்

Source link