காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் – சைதாப்பேட்டையில் தீவிர வாக்கு சேகரிப்பில் மா.சு – minister ma. subramanian intensifies saidapet campaign announces upcoming cancer research centre in kanchipuram

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே மீதமிருக்கக்கூடிய சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் எவ்வளவு அதிகமாக இருப்பினும், வேட்பாளர்கள் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சட்டமன்ற தேர்தல் 2026 -இல் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் போட்டியிடும் நிலையில், இன்று சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜோன்ஸ் ரோடு, விசாக தோட்டம், காரணிப்பேட்டை,உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் அவரவர் கட்சி கொடிகள் உடன் ஆரவாரத்துடன் பிரச்சார கூட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளிலிருந்து, இரவு பகலாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

பிரச்சாரத்தை தொடங்கிய போது ஒவ்வொரு வீதியாக சென்றால் மக்கள் திமுகவுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக வரவேற்பு தந்து கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்!

மேலும் காஞ்சிபுரம் காரப்பாக்கம் பகுதியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உருவாகிக்கொண்டிருக்கிறது என குறிப்பிட்ட அவர், மேலும் மும்பையில் உள்ள டாட்டா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் எனவும் அதற்கு பிறகு தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் காரப்பாக்கத்தில் அண்ணாவின் பேரில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் இலவச டயாலிசிஸ்

மக்களிடையே யாலிசிஸ் சிறுநீரக பிரச்சனை அதிகமாக காணப்பட்டு வருவதால் இந்த அரசு அமைந்த பிறகு 500க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டது என கூறிய அவர் அது மட்டும் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் இலவச டயாலிசிஸ் செய்து கொள்வதற்கும் தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொள்வதற்கான காப்பீடு திட்டங்களை இந்த அரசு மக்களுக்கு தந்துள்ளது எனவும் அவர் பேசியிருந்தார்.

மேலும் அவர் பேசுகையில்,” டயாலிசிஸ் வாரத்திற்கு இரண்டு முறை மூன்று முறை செய்ய வேண்டும் இதற்கு குறைந்தபட்சமாக 8000 முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் இதை இந்த அரசு இலவச டயலாக் சென்டர்களை தொடங்கி மக்களுக்கு இலவசமாக தந்து கொண்டிருக்கிறது” உணவு கூறினார்.

தமிழகத்தில் நான்கு முனை போட்டி என்பதால், தேர்தல் வேலைகள் வேகமெடுத்து வருகின்றன. ஆனாலும் திமுக ஆட்சியின்போது நடந்த ‘கிட்னி திருட்டு விவகாரம்’ மிகப்பெரிய பேசுபொருள் ஆனது. அதுகுறித்து அந்த சமயத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் “சிறுநீரக திருட்டு அல்ல.. முறைகேடு” என பேசியிருந்தது கடுமையான எதிர்ப்புகளை பெற்றது.

தொடர்ந்து, மேலும் ஆளும் கட்சியான திமுக மீது இருக்கக்கூடிய ‘anti incumbency’ அவர்களுக்கு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இவற்றோடு தமிழக வெற்றி கழகமும் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கலாம் என சொல்லப்படுகிறது.

Source link