காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? திருமாவளவன் முடிவுக்கு பின்னால் அரசியல் கணக்கு! – vck leader thol. thirumavalavan clarifies stance on contesting assembly elections

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொல் திருமாவளவன் விளக்கம் அளித்தார் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

thirumavalavan(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்க வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொகுதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மேலும் இந்த தேர்தலில் விசிக பானை சின்னத்தில் 8 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

விசிக-வின் வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள்:
  • காட்டுமன்னார்கோவில் தொகுதி – திருமாவளவன்
  • வன்னி அரசு – திண்டிவனம் (தனி)
  • சக்திவேல் – பெரிகுளம் (தனி)
  • மாலதி – கள்ளக்குறிச்சி (தனி)
  • அப்துல் ரகுமான் – பண்ருட்டி
  • எழில் கரோலின் – அரக்கோணம் (தனி)
  • பன்னீர் தாஸ் – திருப்போரூர் (தனி)
  • சிந்தனைச் செல்வன் – செய்யூர் (தனி)

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியை ஏன் தேர்வு செய்தார். மேலும் தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம். சிதம்பர நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் காட்டுமன்னார்கோவில் மிகவும் முக்கியமான ஒன்று .திருமாவளவனின் அரசியல் பயணம் இந்த பகுதியில் இருந்துதான் ஆரம்பித்தது என்று கூறலாம். அதனால், இந்த தொகுதியை அவரது கட்சியின் வலுவான ஆதரவு மையமாக பார்க்கப்படுகிறது. இங்கு தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றன.

கூட்டணி தர்மம் எங்கே_ ஏமாற்றத்தில் விசிக_

திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் போட்டி

இவர்களின் வாக்குகள் திருமாவளவனுக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு திருமாவளவன் முதன் முதலாக மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அவரது கட்சி படிப்படியாக வலுப்பெற்றது. குறிப்பாக 2006ம் ஆண்டு ரவிக்குமார் விசிக சார்பில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சிந்தனைச் செல்வன் 49 புள்ளி 20 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த சூழலில் 2026 காண சட்டமன்றத் தேர்தலில் விசிகவின் வாய்ப்புகளை பார்க்கும்போது தற்போதைய எம்.பி. திருமாவளவன் தனது தொகுதிக்காக செய்த பணிகள் மற்றும் மக்களுடன் வைத்துள்ள நெருக்கம் அவருக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திமுக கூட்டணியில் விசிக்க இருப்பதால் அந்த கட்சியின் வாக்குகளும் சேர்த்து வெற்றியை எளிதாகும் என்று அரசியல் வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது. இந்த கூட்டணியில் மதசார்பற்ற அணுகுமுறை முஸ்லிம் வாக்குகளை ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பெரும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழக அரசியலில் அதாவது மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.