‘காதலர் தினம்’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு

சென்னை,

அண்மைக்காலமாக பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரீ ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், கமலஹாசனின் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், விஜய் நடித்த கில்லி, அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் சிலம்பாட்டம் போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியது.

இந்த நிலையில், காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’, மாதவனின் ‘மின்னலே’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வரிசையில் தற்போது புதிதாக ‘காதலர் தினம்’ படம் இணைந்துள்ளது. இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரீ ரிலீஸ் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குனர் கதிர் இயக்கியிருந்தார். குணால், பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘காதலெனும் தேர்வெழுதி’ பாடலும், ரோஜா ரோஜா பாடலும் இன்றளவும் காதலர்களால் கொண்டாடப்படும் பாடலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link