காதல் இல்லை என்றால் அனைத்தும் அர்த்தமற்றது – நடிகை திரிஷா

தென்னிந்திய திரைப்பட உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தமிழ் மற்று தெலுங்கில் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள திரிஷா ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். அவரது படங்களை தாண்டி தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் அடிக்கடி இணையத்தில் பேசப்படுவது வழக்கம்.

தமிழ், தெலுங்கில் படங்களில் நடித்து கொடிகட்டி பறக்கிறார். சூர்யாவுடன் கருப்பு படத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார். 42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.

சமீபத்தில் தனது வளர்ப்பு நாயை கோயிலுக்கு அழைத்துச் சென்று, அதனுடன் செல்பி எடுத்து பதிவிட்டிருந்தார். அவரது செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், காதல் பற்றி திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காதல் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்பதிவில் அவர், ‘காதல் மட்டுமே எல்லாம் அல்ல. ஆனால், காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது’ என்று பதிவிட்டுள்ளார்.

திரிஷாவை சுற்றி பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், காதல் குறித்து இப்படி அவர் பதிவிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.



Source link