காரைக்குடி பரப்புரையில் பேசாமல் சென்ற விஜய்.. கடும் ஏமாற்றத்தில் தவெக தொண்டர்கள்.. என்ன காரணம்? – tvk leader vijay leaves karaikudi campaign without addressing the gathering

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இன்று காரைக்குடியில் பரப்புரை மேற்கொள்வதற்காக முழு வீச்சில் பணிகள் நடந்தது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பி தனி விமானத்தின் மூலமாக மதுரைக்கு வந்தார் விஜய். இதனையடுத்து பிரச்சார வேனில் காரைக்குடிக்கு தவெக தலைவர் விஜய் கிளம்பி சென்றார்.

சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சி தலைவர்களின் பரப்புரை முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக, நாதக என அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களும் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதனிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இன்று காரைக்குடியில் பரப்புரை மேற்கொள்வதற்காக வருகை தந்தார். இதற்காக கலையில் இருந்தே தவெக தொண்டர்கள் காத்திருப்பில் இருந்தனர்.

இந்நிலையில் காரைக்குடியில் பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வருகை தந்த விஜய், அங்கு நின்று பேசாமல் கையசைத்துவிட்டு புறப்பட்டுச் சென்று விட்டார். இதனால் அவரின் வருகைக்காக காத்திருப்பில் இருந்த தவெகவினர் ஏமாற்றம் அடைந்தனர். ரோடு ஷோ மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட இடத்துக்கு விஜய் வந்ததால் அவர் பேசாம சென்று விட்டதாக கூறப்படுகிறது.