கார் பந்தயத்திற்காக ரூ. 270 கோடி வீண் செலவு – திமுக மீது சசிகலா அட்டாக்! – sasikala slams dmk over ₹270 crore waste on car race

தமிழ்நாட்டில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் Formula 4 கார் பந்தயம் நடைபெற்றது . இதற்கு செலவு செய்யப்பட்ட ரூ. 270 கோடி வீண் செலவு என சசிகலா விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன் பாண்டியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா விளாத்திகுளம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுக அரசின் மீது தாக்குதல் தொடுத்த சசிகலா

  • திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு முறையாக சீருடை வழங்கவில்லை.
  • விலையில்லா பேன் மிக்ஸி கிரைண்டர் என பெண்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.
  • பல்வேறு கிராமங்களில் பால வசதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.
  • அரசுக்கு வரக்கூடிய வருவாய் வேறு எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது.
  • பல்வேறு கிராமங்களில் பால வசதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை. ஆனால் பெரிய நகரங்களில் மட்டும் பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளனர் . அதற்கு காரணம் அதில் அதிக வருவாய் வரும் என்று நினைத்தே திமுக இவ்வாறு செய்துள்ளது.
  • பெண்களுக்கு ரூபாய் 8000 கூப்பன் தருகிறோம் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று முதல்வரே கூறுகிறார்.
  • ஏப் 23 -ல் எங்களுக்கு ஓட்டு போட்டு விடுங்கள். கூப்பனை வாங்கிக்கொள்கள் என்று முதல்வர் கூறுகிறார்,இதனால் கடன் சுமை தான் அதிகரிக்கும்.
  • படித்த குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை.
  • மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.
  • வீட்டு வரி சொத்து வரி உயர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் வைத்துவிட்டு ரூ. 1000 வழங்குவதாக திமுக அரசு கூறுகிறது என சசிகலா திமுக ஆட்சி குறித்தும், தேர்தலை முன்னிட்டு அவர் அளித்த நலத்திட்டங்கள் குறித்தும் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சித்தார். நான் ஆட்சியில் அமர வைத்தவரும் திமுகவுக்கு இளைத்தவர் அல்ல,கழுத்தில் போட்டிருக்கும் துண்டில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் எவ்வளவு இணக்கம் என்பது தெரிகிறது என விமர்சித்தார்.

F4 குறித்து விமர்சனம்!

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் கார் பந்தயத்திற்காக ரூ. 270 கோடி செலவு செய்து திமுக வீணடித்தது. கார் பந்தயத்திற்கு பயன்படுத்திய பணத்தை மக்களுக்கு நல்லது செய்ய பயன்படுத்தியிருக்கலாம் என கூறினார்.

மேலும் “விளாத்திகுளம் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையை தமிழக அரசு மேம்படுத்தவில்லை. விளாத்திகுளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டவில்லை எனவும் விளாத்திகுளம் பகுதியில் மத்திய அரசு உதவியுடன் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது ஆனால் அதனை நிரைவேற்றவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் அந்த பரப்புரையில் மத்திய அரசிடம் சண்டை போடுவது திமுக வேலையாக உள்ளது. பின்னர் எப்படி திட்டங்களை கொண்டு வருவார்கள். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சட்டம் ஓழுங்கு சிறப்பாக இருந்தது என பேசினார்.

Source link