கின்னஸ் சாதனை…கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜாஸ் பட்லர்

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 122 மீட்டர் உயரத்தில் இருந்து டிரோன் மூலம் கீழே விடப்பட்ட கிரிக்கெட் பந்தை வெற்றிகரமாக பிடித்து அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இந்த முயற்சி அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரத்தில் இருந்து விடப்பட்ட பந்தை பிடித்தது கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்காத ஒன்றாகும். இந்த சாதனை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Also Read
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்..
கின்னஸ் சாதனை...கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜாஸ் பட்லர்

முன்னதாக, 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் திமோதி ஷானன் ஜெபசீலன் மிக உயரத்தில் இருந்து கேட்சைப் பிடித்ததற்காக கின்னஸ் உலக சாதனையைப் படைத்திருந்தார். அவர் 119.86 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த பந்தை பிடித்து தனது பெயரை அப்போதே சாதனைப் புத்தகத்தில் எழுதினார்.

Source link