குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்ட பகுதியில் நேற்று அதிகாலை 5.27 மணி யளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.4 அலகுகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி வன்ஸ்தா நகருக்கு கிழக்கு-தென்கிழக்கே 22 கி.மீ தொலைவில் நிலப்பரப் பிற்கு அடியில் மையம் கொண்டிருந்தது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link