குடிசை மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள்: என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மேலும் ஒரு சர்ச்சை 

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது. அதில், நீதித் துறை​யின் ஊழல் குறித்து விவரிக்​கப்​பட்டு இருந்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதிமன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து இருந்தது. 

சமூக அறிவியல் புத்தகத்தை பதிப்பதற்கோ வெளியிடுவதற்கோ தடை விதித்து தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. மேலும், இப்புத்தகத்திலுள்ள ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை பொதுவெளியில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க என்சிஇஆர்டி இயக்குநருக்கும் பள்ளிக்கல்வித் துறை செயலருக்கும் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இத்தகைய செயலுக்குக் காரணமானவர்கள் மீது ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கூடாதென நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப்​புத்​தகத்​தில், நீதி​மன்​றத்​தின் சமீபத்​திய தீர்ப்​பு​கள் குடிசை​வாழ் மக்​களை ஆக்​கிரமிப்​பாளர்​களாக பார்ப்​ப​தாக குறிப்​பிட்​டுள்​ளது என என்​சிஆர்​டி​யின் முன்​னாள் பேராசிரியர் பங்​கஜ் புஷ்கர் என்​பவர் வழக்கு தொடர்ந்​துள்​ளார். இது மாணவர்​களுக்கு நீதித்​துறை குறித்து தவறான புரிதலை ஏற்​படுத்​தும். இப்​புத்​தகத்தை மறுஆய்வு செய்து உரிய திருத்​தம் செய்​ய​வும், எதிர்​காலத்​தில் இது​போன்ற தவறுகள் ஏற்​ப​டா​மல் இருக்க நடவடிக்கை எடுக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும் என்​றும் பங்​கஜ் புஷ்கர்​ கூறி​யுள்​ளார்​.

Source link