கும்மிடிப்பூண்டியில் தவெக பிரச்சாரம் கடைசி நேரத்தில் ரத்து ..- விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? – tvk vijay vijay gummidipoondi 2026 election campaign cancelled

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கும்மிடிப்பூண்டி பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் 2026 காண சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்காக ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை இலக்காகக் கொண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ளார்.

விஜய் கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து

இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் 234 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் தமிழகவெற்றிக் கழகம் 23 தொகுதிகளில் தனித்து களமிறங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே மீதம் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், விஜய்யும் தன்னுடைய வேட்பாளர்களை ஆதரித்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களை டார்கெட் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கொதித்த விஜய்…திமுக மீது கடும் விமர்சனம்!

இதற்கிடையே விஜய் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் விபத்துகளும் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக கட்சித் தலைமையும் விஜய்யும் பலமுறை எடுத்து சொல்லியும் ஒரே முறை ஒரு தலைவரை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்குவது விஜயின் அரசியலில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில் நாளை மறுதினம் கும்முடிபூண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சி தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது, விஜய் பேசவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டது.

தவெக தொண்டர்கள் அதிர்ச்சி

இதனைத் தொடர்ந்து வரும் 19ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு பதிலாக ரோடு ஷோ செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.இப்படி தேர்தல் நெருங்கும் சூழலில் பரப்புரையை தீவிரபடுத்த வேண்டிய விஜய் திடீரென்று ரத்து செய்வது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.குறிப்பாக விஜய்யின் பிரச்சாரங்களுக்கு பல்வேறு காரணங்கள் கூறி அனுமதி மறுக்கப்படுவதும், கடைசி நேரத்தில் கால அவசாகசம் குறைக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

விஜய் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

உதாரணத்திற்கு தி. நகர் மற்றும் வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், காவல்துறை தரப்பில் 1மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது.இது தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது ஒருவித அனுதாப அலையை உருவாக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.மேலும் தேர்தலில் ஒரு புதிய கட்சியாக தவெக களமிறங்கும் போது அதற்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற பிம்பம் உருவாவது விஜய்க்கு சாதகமாக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், தொடர் ரத்துகள் காரணமாக விஜய் தனது பிரச்சார முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பொதுக்கூட்டங்களுக்குப் பதிலாக கன்னியாகுமரி போன்ற இடங்களில் திட்டமிடப்பட்டுள்ள ‘ரோடு ஷோ முறை அதிக மக்களைச் சென்றடைய உதவும். களத்தில் இறங்கத் தடைகள் வரும்போது, சமூக வலைதளங்கள் வாயிலாக நேரடியாக இளைஞர்களைச் சென்றடையும் யுக்தியை தவெக தீவிரப்படுத்தும் என்று கூறப்படுகிறது.