குறைந்த வயதில் 4,000 ரன்கள் அடித்த முதல் வீரர்

குறைந்த வயதில் 4,000 ரன்கள் அடித்த முதல் வீரர் :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குறைந்த வயதில் 4 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் படைத்துள்ளார்..! 25 வயதான அவர் வெறும் 118 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதேபோல் கே.எல்.ராகுலுக்கு பிறகு வேகமாக 4 ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

17 பந்துகளில் 50 ரன்கள் அடித்த ஆர்சிபி கேப்டன் பட்டிதர் :

ஐபிஎலில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதர் 17 பந்துகளில் அரை சதம் அடித்து அதிரடி காட்டினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த கேப்டன் என்ற ஆடம் கில்கிறிஸ்ட்-ன் (( Adam Gilchrist )) சாதனையை அவர் சமன் செய்தார். 2009-ல் டெல்லி கேப்டனாக இருந்த போது ஆடம் இந்த சாதனையை படைத்தது குறிப்பிடதக்கது.

மும்பை வீரர் பும்ராவுக்கு சோதனைக் காலம் :

நடப்பு ஐபிஎல் லீக் தொடரில் நட்சத்திர பந்து வீச்சாளரான பும்ரா ஒரு விக்கெட்டுகளை கூட எடுக்காதது பேசுபொருளாக மாறியுள்ளது…! சர்வதேச போட்டிகளில் விக்கெட் மழை பொழியும் பும்ரா, ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய 4 போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. மும்பை அணியின் தொடர் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

மும்பை அணிக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த வீரர் :

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்துள்ளார். கோலிக்கு அடுத்ததாக 977 ரன்களுடன் கே.எல்.ராகுல் இரண்டாவது இடத்திலும், 901 ரன்களுடன் ஷிகர் தவான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஐபிஎல் புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி முன்னேற்றம் : 

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இதில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்த கொல்கத்தா அணி கடைசி இடத்திலும் உள்ளன.

மும்பை அணியை பந்தாடியது பெங்களூரு அணி :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது..! முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Source link