குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்; அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞர் உள்பட 4 பேர் கைது

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில், சமூக வலைதளங்கள், வீடியோ கேம் விளையாட்டுகள் உள்ளிட்டவை மூலமாக குழந்தைகள் மற்றும் சிறுமிகளை தொடர்பு கொண்டு, அவர்களை பாலியல் அத்துமீறலுக்கு பயன்படுத்தி வந்த ஒரு குழுவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த குழுவை பிடிப்பதற்கு போலீசார் போலியான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி, சம்பந்தப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் அவர்களின் இருப்பிடத்தை நெருங்கி அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் நாகராஜு பால்கம்(வயது 26) ஆகும்.

மேலும், இந்த குழுவைச் சேர்ந்த எட்வர்டோ ராமிரெஸ்(வயது 59), ஹரோல்ட் ஆடம்ஸ்(வயது 55) மற்றும் தாமஸ் காக்ஜோ(வயது 29) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link