கூடுவாஞ்சேரி அருகே மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்து 3 பேர் உயிரிழந்த சோகம்

சென்னை,

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி கன்னிவாக்கத்தில் மின்கசிவால் வீடு தீப்பற்றியதில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அருகிலிருந்த துணியில் தீப்பற்றி வீடு முழுவதும் தீ பரவியநிலையில், அதில் சிக்கி பார்த்திபன் (33), அவரது மனைவி ஜெயசித்ரா (29), இரண்டரை வயது குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link