கூட்டணியில் சேரும்படி தவெகவுக்கு பாஜக நெருக்கடி? – பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

குழித்துறை,

குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலில் பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் முழு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் குழித்துறையில் பா.ஜனதா அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மாபெரும் அரசை அமைக்கும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க.வை சேர்க்க மத்திய அரசின் அமைப்புகளை பயன்படுத்தி மிரட்டுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையல்ல. பா.ஜனதா எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. கூட்டணி அமைப்பதற்கு பா.ஜனதாவுக்கு தொண்டர்களின் பலமும், கட்சியின் கொள்கைகளும் போதும். தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதிருப்தியில் உள்ளன. கம்யூனிஸ்டு கட்சிகள் நிரந்தரமாக குழப்பம் ஏற்படுத்துபவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Source link