பெஜியா,
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப் ரஸ் நாட்டில் நடந்து வருகிறது.
நேற்று 6-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி 47-வது காய் நகர்த்தலில் உக்ரைனின் கேத்ரினா லாக்னோவை தோற்கடித்தார். மற் றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் 46-வது காய் நகர்த்தலில் பிபிசாரா அஸ்சாபாயேயாவை (கஜகஸ்தான்) வீழ்த்தினார்.
